Site icon அநேகன்

சிறு வியாபாரிகளின் நலனுக்காக வெ. 2 கோடியே 11 லட்சம் ஒதுக்கீடு! -ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு

ஷா ஆலம், நவ.20 –
இம்மாநில சிறு வியாபாரிகளின் மேம்பாட்டிற்காக
கடந்த 8 ஆண்டுகளில் 2 கோடியே 11 லட்சம் வெள்ளி
செலவிடப்பட்டதாக மாநில மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு தெரிவித்தார்.

மாநில அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு (புளுபிரிண்ட்)
திட்டத்தின் வாயிலாக கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இதுவரை
5,645 பேர் பயனடைந்துள்ளதாகக் கூறப்பட்டது.

இது தவிர்த்து, இந்திய தொழில்முனைவோருக்காக
2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிலாங்கூர் இந்திய சமூக மற்றும்
தொழில் முனைவோர் மேம்பாட்டு இலாகா (ஐ-சீட்) வாயிலாக 410பேர் 23 லட்சத்து 10 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான வர்த்தக
உபகரணங்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் சொன்னார்.

மேற்குறிப்பிட்ட திட்டங்கள் வாயிலாக விவசாயம், கால்
நடை வளர்ப்பு போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களின் வர்த்தகத்தை மேம்படுத்திக்
கொண்டதாக மாநில சட்டமன்ற கூட்டத்தில் விவரித்தார்.

பண்டமாரான் உறுப்பினர் டோனி லியோங் தக் சீயின் துணைக் கேள்வி ஒன்றுக்கு
பாப்பாராய்டு மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

இத்திட்டங்கள் மூலம் உதவி பெறுவோர்
தங்களுக்குக் கிடைத்த வரத்தக உபகரணங்களை விற்கக்கூடாது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்தத் தவணை தொடங்கி வழங்கப்படும் உபகரணங்கள் மீது பிரத்தியேக
வில்லைகள் ஒட்டப்படும். ஒப்பந்தத்தை மீறுவோருக்கு எதிராக
சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த வர்த்தக உபகரணங்கள் மக்களின் வரிப்பணத்திலிருந்து
வழங்கப்படுகின்றன. ஆகையால் இவற்றை வியாபாரிகள் தங்களின் வர்த்தக நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று பாப்பாராய்டு வலியுறுத்தினார்.

Exit mobile version