கோலாலம்பூர், டிச. 24-
நாளை கிறிஸ்துமஸ் தினத்தன்று காலையில் சிலாங்கூர், நெகிரி செம்பிலான், சபா மற்றும் சரவாக் ஆகிய நான்கு மாநிலங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே வேளையில், கெடா, பினாங்கு, சிலாங்கூர், கோலாலம்பூர், நெகிரி செம்பிலான், ஜோகூர், பகாங், திரெங்கானு, கிளந்தான், சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் மாலையில் இதே நிலை தொடரும் என்று மலேசிய வானிலை ஆய்வு துறை தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து, ஜோகூர், பகாங்,
சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் இரவு வேளையில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் இந்த ஆய்வகம் கூறியது.

