Site icon அநேகன்

5வாகனங்களை உட்படுத்திய விபத்து:  வாகன நிறுவனம் மீது ஜேபிஜே  நடவடி‌க்கை!

 

புத்ராஜெயா, டிச. 24-

எழுவரின் உயிரிழப்புக்குக் காரணமான விபத்தில் சம்பந்தப்பட்ட வாகன நிறுவனத்திற்கு எதிராக சாலை போக்குவரத்து இலாகா (ஜேபிஜே) சோதனை மற்றும் பாதுகாப்பு ஆய்வை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இவ்விபத்து மலாக்கா, சிம்பாங் அம்பாட் அருகே வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையின் 204 ஆவது கிலோ மீட்டரில் நேற்று நடந்தது.

இதில் வர்த்தக வாகனம் சம்பந்தப்பட்டிருப்பது குறித்து ஜேபிஜே தலைமை இய‌க்குன‌ர் டத்தோ அடி ஃபாட்டி ரம்லி வருத்தம் தெரிவித்தார்.

லோரியில் இருந்து கழன்று விழுந்த டயரே இவ்விபத்துக்குக் காரணம் என்று அலோர்காஜா மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டென்டன் அஸாரி அபு சாமா கூறினார்.

இவ்விபத்தில் சுற்றுலா பேருந்து ஓட்டுநர், பயணி ஆகிய இருவரோடு தோயோத்தா எஸ்டிமா காரோட்டி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உள்பட எழுவர் உயிரிழந்தனர்.

 

Exit mobile version