Site icon அநேகன்

உடல்நலம் தேறி வரும் பத்திரிகை துணையாசிரியர் வேங்கடேஷை மருத்துவமனையில் சென்று கண்டார் டத்தோஸ்ரீ சரவணன்!

சுங்கை பூலோ, ஜன.2-மூலையில் ஏற்பட்ட ரத்த கசிவில் இருந்து உடல் நலம் தேறி வரும் தமிழ்ப் பத்திரிக்கை துணையாசிரியர் வெங்கடேஷை மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இன்று மருத்துவமனையில் சென்று கண்டார்.

கடந்த வாரத்தில் சுங்கை பூலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெங்கடேஷ் (37) அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தற்போது உடல் நலம் தேறி வருகிறார்.

வெங்கடேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் கேட்டு டத்தோஸ்ரீ எம்.சரவணன் இன்று சுங்கை பூலோ மருத்துவமனைக்குச் சென்று அவரைச் சந்தித்தார்.

இவரின் நிலையைக் கருத்திற் கொண்டு இவரின் குடும்பத்தாரிடம் நிதியுதவியை வழங்கினார். தொடர் சிகிச்சைக்குத் தேவையான உதவி வழங்கத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

வெங்கடேஷ் மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கையாளர் சங்க செயலவை உறுப்பினரும் ஆவார்.
-நன்றி தமிழ் லென்ஸ்

Exit mobile version