சிப்பாங், ஜன 3-இந்தியா, சபரி மலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் இந்நாட்டிலுள்ள ஐயப்ப பக்தர்களுக்கு சிப்பாங், அனைத்துலக விமான நிலையத்தில் சிறப்பு வழித்தடத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் பிரதமர் மற்றும் போக்குவரத்து அமைச்சருக்கு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
ஐயப்ப பக்தர்களுக்கு வசதியாக விமான நிலையங்களில் சிறப்புத் தடத்தை ஏற்பாடு செய்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ ஃபூக், தலைமைச் செயலாளர் டத்தோ ஜனா சந்திரன் ஆகியோருக்கு குணராஜ் நன்றி கூறினார்.
அதே வேளையில், மலேசிய ஏர்போர்ட் ஹோல்டிங் பெர்ஹாட், குடிநுழைவு துறை, மலேசிய ஏர்லைன்ஸ், பாத்தே ஏர், ஏர் ஆசியா உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இன்று காலை மணி 9.30க்கு 100க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு தங்களின் பயணத்தைத் தொடங்கினர்.

