Site icon அநேகன்

ஆட்டம்: மீண்டும் முதல் இடத்தில் மில்லினியம் ஆர்ட்ஸ்! 

 

கோலாலம்பூர், ஜன. 7-ஆஸ்ட்ரோவின் பிரத்தியேக உள்ளூர் தமிழ் ரியாலிட்டி நடனப் போட்டியான ஆட்டத்தில் ‘நேற்று முன் தினம் நோ நோ’ என்றப் பாடலுக்குக் குறிப்பிடத்தக்க நடனப் படைப்பை வழங்கி மில்லினியம் ஆர்ட்ஸ் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது.

ஜனவரி 4 மற்றும் 5, இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் ‘பிரபு தேவா சுற்று’ என்ற கருப்பொருளில் ஒன்பதாம் மற்றும் பத்தாம் அத்தியாயங்கள் முதல் ஒளிபரப்பு கண்டன.

உள்ளூர் நடன இயக்குனரும் இயக்குனருமான இந்திரன் இந்த அத்தியாயங்களில் விருந்தினர் நடுவராக இடம்பெற்றார். நடனக் கலைஞர், நடன இயக்குனர், மற்றும் நடிகர் எம்.ஜே. நாடா; தொகுப்பாளர், நடனக் கலைஞர், உள்ளூர் நடனப் பள்ளியின் இணை நிறுவனர் மட்டும்மல்லாது ஆட்டம் 100 வகையின் தொகுப்பாளருமான, அருணா; மற்றும் சிங்கப்பூரின் நடனக் கலைஞர், நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் மற்றும் ஆட்டம் 100 வகை சீசன் 3-இன் வெற்றியாளர்களில் ஒருவரான ராமேஸ்வரா ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக இருந்தனர்.

 

சிறந்த 8 அணிகளின் விபரங்கள் பின்வருமாறு:

 

போட்டியிடும் அணி

பாடல்

புள்ளிகள்

மில்லினியம் ஆர்ட்ஸ்

நேற்று நோ நோ

85.45

கேஎல்எம்டி பாய்ஸ்

மெட்ரோ ஜன்னல்

80.35

மகாராணி’ஸ்

ஐலசா

77.40

ஹைப்பர்ஃப்ளெக்ஸ் டிசி

மோனாலிசா

72.45

வி-ஹாரா

ஏரானி குறதானி

72.20

ஸ்ரீ அக்னி டான்ஸ் குரூப்

குலேபா

69.50

திரவ்

ரோமியோ ஆட்டம் போட்டா

62.05

தக்ஷா ஆர்ட்ஸ்

கலர்புல் நிலவு

61.10

சிவாலயாஸ் ஆர்ட்ஸ்

காத்தடிக்குது

48.85

ஆட்டம் வெற்றியாளர்களுக்குக் காத்திருக்கும் அற்புதமான ரொக்கப் பரிசுகள் பின்வருமாறு:

முதலாம் பரிசு: ரிம50,000.00

இரண்டாம் பரிசு: ரிம25,000.00

முன்றாம் மற்றும் நான்காம் பரிசுகள்: ஒவ்வொரு குழுக்கும் தலா ரிம5,000.00; மற்றும்

ஐந்தாம் மற்றும் ஆறாம் பரிசுகள்: ஒவ்வொரு குழுக்கும் தலா ரிம2,000.00

ஆட்டம் நிகழ்ச்சியின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் கண்டு மகிழுங்கள்.

மேல் விபரங்களுக்கு astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

 

 

Exit mobile version