கோலாலம்பூர், ஜன. 7-நரம்பியல் நோயால் அவதியுற்று வரும் கலைவாணி தர்மலிங்கம் சிகிச்சை கட்டணத்திற்கு பொது மக்களின் உதவியை நாடியுள்ளார்.
சில வருடங்களாக கடுமையான நரம்பியல் நோயால் அவதியுற்று வரும் கலைவாணி தர்மலிங்கம், தற்பொழுது யுனிவர்சிட்டி மலாயா (பிபியுஎம்) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனைக்கான கட்டணம் செலுத்த முடியாத நிலையில் இவரின் குடும்பத்தினர் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
ரி. ம. 19,196.25 மற்றும் ரி.ம.14884 ஆகிய 2 மருத்துவக் கட்டணங்கள் நிலுவையில் உள்ள நிலையில் தனது சிகிச்சையைத் தொடர்வதில் சிக்கலை எதிர்நோக்கியுள்ளார்.
ஆகையால், நல்லுள்ளங்கள் கலைவாணிக்கு உதவுமாறு குடும்பத்தினர் மனமுருகி கேட்டுக் கொள்கின்றனர். தொடர்புக்கு: கிருபாஷினி (அக்காள்) தொலைபேசி எண்:0102747601 KIRUBASHINI A/P RAMAMOORTHY 162218748779 மேபேங்க்

