Site icon அநேகன்

ஜன. 18 இல் மக்கள் சக்தி கட்சியின் தைப்பொங்கல்!

கோலாலம்பூர் ஜன 13-

தைப்பொங்கலை முன்னிட்டு மக்கள் சக்தி கட்சியின் ஏற்பாட்டில் இம்மாதம் 18 ஆம் தேதி நெகிரி செம்பிலான் பகாவ் ஜெம்புல் மண்டபத்தில் தமிழர் திருநாள் பொங்கல் விழா மிகவும் விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய அளவில் நடத்தப்படும் தைப்பொங்கல் விழாவில் 2,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விழாவில் அனைவருக்கும் சுவையான உணவும் பரிமாறப்படும் என்று மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் கூறினார்

தைப்பொங்கல் தமிழர் திருநாளை முன்னிட்டு உறி அடித்தல், கோளம் போடுதல், தோரணம் கட்டுதல் போன்ற பாரம்பரிய பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்.

தைப்பொங்கல் விழாவானது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் பாரம்பரிய எழுச்சி விழாவாகும்.

இதன் அடிப்படையில் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் ஏற்பாட்டில் ஜனவரி 18 இல் பிற்பகல் 12.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை நடைபெறும் தைப்பொங்கல் விழாவில் சுற்று வட்டார மக்கள் திரளாகக் கலந்து கொள்ளும்படி அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Exit mobile version