Site icon அநேகன்

பிரிக்பீல்ட்ஸ், லிட்டில் இந்தியாவில் கேவிடி கோல்டு நிறுவனத்தின் தங்க மாளிகை திறப்பு விழா!

கோலாலம்பூர், ஜன. 18-கேவிடி கோல்டு நிறுவனத்தின் மூன்றாவது கிளை இங்குள்ள பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் இன்று பிரம்மாண்ட திறப்பு விழா கண்டது.

மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன், கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா ஆகியோர் தலைமையில் அதிகாரப்பூர்வ திறப்பு விழா கண்டது கேவிடி கோல்டு நிறுவனத்தின் மூன்றாவது கிளை.

இது ஜி6, எண்.248, சென்ட்ரல் சூட்ஸ், லிட்டில் இந்தியா, ஜாலான் துன் சம்பந்தன், பிரிக்ஃபீல்ட்ஸ், கோலாலம்பூர் எனும் வியூகமிக்க இடத்தில் இக்கிளை நிறுவனம் அமைந்துள்ளது.

சுற்று வட்டாரம் உட்பட நாடளாவிய இந்தியர்கள் தரமான மற்றும் புதிய வடிவங்களில் தங்கள் இல்ல திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளுக்கு தங்க நகைகளை வாங்க பிரிக்பீல்ட்ஸ் கேவிடி தங்க மாளிகையை தாராளமாக நாடலாம் என்றார் டத்தோ ஸ்ரீ சரவணன்.அதே வேளையில், இதன் உரிமையாளர் கே. வி.தங்கதுரை மற்றும் பங்குதார்களுக்கும் இவர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.

இதனிடையே, 5,000 வெள்ளிக்கு மேல் தங்க நகைகளை வாங்குவோர் மற்றும் வைர நகைகளை வாங்குவோர் என வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளுடன் கூடிய சிறப்பு விற்பனையையும் தாங்கள் வழங்குவதாக தங்கதுரை விவரித்தார்.

பொது மக்கள்,வர்த்தக பிரமுகர்கள் என திரளானோர் இந்தத் தங்க மாளிகை திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

 

Exit mobile version