Site icon அநேகன்

மஇகா மலாக்கா மகளிர் & ஜாசின் மகளிர் இணை ஏற்பாட்டில் ஒற்றுமை பொங்கல் ! 

ஜாசின், ஜன. 23-

சந்திரா சாந்தினி தலைமையிலான  மஇகா மலாக்கா மாநில மகளிர்  ஜாசின்  மகளிர் பிரிவுடன் இணைந்து ஒற்றுமை பொங்கல் விழாவை  பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளுடன் மிகவும் கோலாகலமாக நடத்தியது.

இங்குள்ள தாமான் மாஜூ பொது மண்டபத்தில் ஜனவரி 19ஆம் தேதி நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மலாக்கா மாநில மஇகா தொடர்பு குழு தலைவர் டத்தோ விபி சண்முகம் சிறப்பு வருகை புரிந்தார்.

ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் இன்ஸ்பெக்டர் முகமது அஸார் இட்ரிஸ், ஆசிரியர் கே. குணசேகரன் (மஇகா ஜாசின் தொகுதி தலைவர்) மலாக்கா மாநில மஇகா செயலாளர் விஸ்வம், திருமதி கோமதி (தம்பாக் பாயா), திருமதி சத்தியா, திருமதி லதா, திருமதி நல்லம்மாள், கூ குடும்பத்தார், செமாபோக் ஐயன் லேடிஸ் ஆகியோரின் வருகை பொங்கல் கொண்டாட்டத்திற்கு மேலும் மெருகூட்டியது.

ஜாசின் தொகுதி தலைவி திருமதி கணேசம்மா ரமேஷ் தலைமையிலான மகளிர் அணியினர் மற்றும் கோத்தா மலாக்கா, செமாபோக் கிளை மகளிர் பிரிவினரின் கூட்டு  ஏற்பாட்டில் பொங்கல் வைக்கும் வைபவம், சிறார்களின் வர்ணம் தீட்டும் போட்டி, அழகு ராணி, தோரணம் கட்டுதல், கோலம் போடுதல், தேங்காய் துருவுதல் போட்டி போன்றவை விழாவுக்குக் கூடுதல்  சிறப்பைச் சேர்த்தன.

சிலம்பாட்டத்துடன் தொடங்கப்பட்ட இந்தப் பொங்கல் கொண்டாட்டத்தில் பரதம், மலாய் பாரம்பரிய நடனம், காற்றாடி நடனம் போன்றவையும் நிகழ்ச்சியை விழாக் கோலம் காணச் செய்தன.



 



இந்தப் பொங்கல் நிகழ்ச்சியின் வெற்றிக்குப் பாடுபட்ட மற்றும் ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் மஇகா செமாபோக் கிளை மகளிர் பிரிவு தலைவியுமான பிரேமா தேவி பாலன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

 

 

 

Exit mobile version