Site icon அநேகன்

ஜேசிஐ புக்கிட் பிந்தாங் வியூக திட்டமிடல் குழு-ஜேசிஐ முன்னாள் உறுப்பினர்கள் சங்கம் சந்திப்பு

கோலாலம்பூர், ஜன. 27-

2025 ஆம் ஆண்டுக்கான JCI புக்கிட் பிந்தாங்கின் தூர நோக்கு திட்டம் மற்றும் இலக்கை நிர்ணயிக்கும் பொருட்டு ஜேசிஐ புக்கிட் பிந்தாங் வியூக திட்டமிடல் குழுவும் ஜேசிஐ புக்கிட் பிந்தாங் முன்னாள் உறுப்பினர்கள் சங்கமும் சந்திப்பு கூட்டத்தை நடத்தியது.

2028 ஆம் ஆண்டுவாக்கில் புக்கிட் பிந்தாங் அபரிமித முன்னேற்றத்தைக் காண வேண்டும் என்ற நோக்கத்தில் இச்சந்திப்பு நடத்தப்பட்டது.

இச்சந்திப்பில் ஜேசிஐ புக்கிட் பிந்தாங் வியூக திட்டமிடல் குழு-ஜேசிஐ புக்கிட் பிந்தாங் முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோரோடு இயக்குநர் வாரிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

சமூகத்தில் ஆக்கப்பூர்வ மாற்றங்களைக் கொண்டு வருவதில் எல்லா வயதினரும் தங்களின் பங்களிப்பை வழங்குவதற்கு JCI ஓர் அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பதாக JCI புக்கிட் பிந்தாங் முன்னாள் உறுப்பினர்கள் சங்கத் தலைவர் காவன் சான் தெரிவித்தார்.

ஐ. நாவின் நீடித்த மேம்பாட்டு இலட்சிய திட்டத்திற்கு ஏற்ப நமது சமூகம் மற்றும் நாட்டிற்கு ஆக்கப்பூர்வ நன்மைகளை ஏற்படுத்த JCI புக்கிட் பிந்தாங் நீடித்த திட்டத்தை அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்று JCI புக்கிட் பிந்தாங் SPC தலைவர் எல்வின் சாங் கூறினார்.

லாப நோக்கத்தைக் கொண்டிராத இளைஞர் அமைப்பான JCI புக்கிட் பிந்தாங், சமய இன வேறுபாடு கருதாது சமூகத்திற்கு அர்ப்பணிப்பு உணர்வோடு சேவையாற்றும் கடப்பாட்டைக் கொண்டிருப்பதாக JCI புக்கிட் பிந்தாங் 2025 உள்ளூர் தலைவர் வோங் வூன் ஃபெய் தெரிவித்தார்.

இன, சமய பேதமின்றி அனைவரும் சிறந்த மற்றும் மனநிறைவான சேவையைப் பெறத் தகுதியுடையவர்கள் என JCI புக்கிட் பிந்தாங் நம்புவதாக அவர் மேலும் சொன்னார்.

நமது சமூகம் மற்றும் நாட்டிற்காக தங்கள் நேரத்தை ஒதுக்கி JCIபுக்கிட் பிந்தாங்கில் சேவையாற்ற முன் வரும்படி இளைஞர்களை தலைவர் வோங் வூன் ஃபெய் கேட்டுக் கொண்டார். மேல் விவரங்களுக்கு வோங் வூன் ஃபெய் 016-2603383 அல்லதுhttps://www.jcibukitbintang.org/ எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

 

 

Exit mobile version