Site icon அநேகன்

தைப்பூச திருவிழாவை பாதுகாப்புடன் கொண்டாடுவீர்!  -பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் வேண்டுகோள் 

பத்துமலை, பிப். 7-வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் தைப்பூச திருவிழாவை அமைதியுடனும் பாதுகாப்புடனும் கொண்டாடும்படி இந்து பெருமக்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கேட்டுக் கொண்டார்.

பல மேம்பாட்டு திட்டங்கள் வாயிலாக பத்துமலையை உலக தரத்திற்கு உயர்த்தியிருக்கும் டான்ஸ்ரீ நடராஜா தலைமையிலான ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் நிர்வாகத்தை பிரதமர் பாராட்டினார்.

தைப்பூச திருவிழாவின் முன்னேற்பாடுகளைப் பார்வையிடுவதற்காக பிரதமர் இன்று பத்துமலைக்கு வருகை மேற்கொண்டார்.

இங்கு புதிதாக மேற்கொள்ளப்படவிருக்கும் பல்நோக்கு மண்டபம் மற்றும் மின் படிக்கட்டு திட்டம் குறித்து இவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

“இத்திட்டங்கள் மீதான ஆய்வுகளுக்குப் பின்னர் இவற்றிற்கான அனுமதி வழங்கப்படும்” என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

Exit mobile version