கோலாலம்பூர் பிப் 8-முஸ்லிம்களுக்கான புதிய வழிகாட்டல் பரிந்துரைகளை ரத்து செய்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அமைச்சரவையின் நடவடிக்கையை பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா பாராட்டினார்.
அமைச்சரவையின் இந்த அதிரடி முடிவு சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது என்றார் அவர்.
இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்கள், மற்றும் இறுதி சடங்குகளில் முஸ்லிம்கள் கலந்து கொள்ள அனுமதி பெற வேண்டும் என்று முன்மொழியப்பட்ட வழிகாட்டியை அமைச்சரவை ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு சிறந்த முடிவு என்று அறிக்கை ஒன்றின் வழி டாக்டர் லோக பாலா சுட்டிக் காட்டினார்.
அதே வேளையில், பத்துமலை திருத்தலத்தில் மேம்பாட்டு திட்டங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கும்படி சிலாங்கூர் மாநில அரசுக்கு உத்தரவிட்ட பிரதமருக்கு இவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

