பத்துமலை, பிப். 11-பத்துமலை தைப்பூச திருவிழாவில் கலந்து கொள்ளும் மக்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் வேய்ன் ஓங் சுன் வேய் தலைமையிலான ஜசெக இளைஞர் பிரிவினர் இவர்களுக்கு கனிம & சுவை நீரை விநியோகம் செய்தனர்.
வேய்ன் ஓங் சுன் வேய் சிலாங்கூர் ஜசெக இளைஞர் பிரிவு (டெப்சி) தலைவரும் தேசிய ஜசெக இளைஞர் பிரிவு துணைத் தலைவரும் ஆவார்.
இவர் தலைமையில் ஆண்டுதோறும் பத்துமலை தைப்பூச திருவிழாவிற்கு வருகை புரியும் டெப்சி உறுப்பினர்கள் பொது மக்களுக்கு கனிம நீரை வழங்கி வருவர்.
அவ்வகையில் இவ்வாண்டும் இப்பணியைத் தொடர்ந்தனர்.
மலேசியாவில் கொண்டாடப்படும் விழாக்களில் அனைத்து இனத்தவரும் பங்கேற்பது விழாவிற்கு மேலும் மெருகூட்டும் என்றார் வேய்ன் ஓங்.

