கோலாலம்பூர், பிப்.20- நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங், கல்வி அமைச்சர் பட்லினா சிடிக்கைச் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பு நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
கெடா கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி, பகாங் ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பினாங்கு சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி ஆகியவை எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இம்மூன்று தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண கல்வியமைச்சின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை அமைச்சர் ஒப்புக்கொண்டார்.
கல்வியமைச்சோடு இணைந்து இப்பள்ளிகளின் பிரச்சனைகளுக்கு தமது தரப்பு நல்லதொரு தீர்வைக் காணும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
அதே வேளையில், இவ்விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரோடு விரைவில் சந்திப்புகள் நடத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.
தற்போது பிரச்சனை களை எதிர்நோக்கும் மேற்கண்ட தமிழ்ப்பள்ளிகள் சுமூகமான தீர்வைக் காண்பதோடு தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதி விரைவில் சென்றடைய தாம் உரிய நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகவும் அமைச்சர் திட்டவட்டமாகக் கூறினார்.

