சுபாங், பிப்.22-வெளிநாட்டில் சிகிச்சை மேற்கொண்ட மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கந்தர் இன்று நாடு திரும்பினார்.
சிறப்பு விமானம் வழி இங்குள்ள அரச மலேசிய விமான தளத்தில் காலை மணி 7.00க்கு வந்திறங்கிய மாமன்னரை இஸ்தானா நெகாராவின் அரச மேளாண்மை அதிகாரி டத்தோ ஸைலானி ஹாஷிம், டத்தோ படுக்கா மஹாராஜா லேலா டத்தோ அசுவான் இஃபெண்டி ஸைரக்கினைனி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
தமது உடல் நலத்திற்காகப் பிரார்த்தனை செய்த நாட்டு மக்கள் அனைவருக்கும் சுல்தான் இப்ராகிம் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
முன்னதாக, சுல்தான் இப்ராகிம் இம்மாதம் 18ஆம் தேதி வெளிநாட்டில் தசை மற்றும் எலும்பு சிகிச்சையை மேற்கொண்டதாக இஸ்தானா நெகாரா இம்மாதம் 18ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

