Site icon அநேகன்

ரயில் மோதி பார்வை குறைந்த ஆடவர் மரணம்: விரிவான விசாரணைக்காக சிறப்பு குழு

கோலாலம்பூர், பிப். 24-இங்குள்ள தித்திவாங்சா எல்ஆர்டி தண்டவாளத்தில் பார்வை குறைந்த ஆடவர் தவறி விழுந்து ரயிலால் மோதி மரணமுற்ற சம்பவத்தை ஆராய பிரசரானா மலேசியா நிறுவனம் (பிரசரானா) சிறப்பு குழுவை அமைத்துள்ளது.

இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை நடந்தது.

இது தொடர்பான சிறப்பு விசாரணைக் குழுவின் முடிவு போக்குவரத்து அமைச்சு மற்றும் தரை பொது போக்குவரத்து நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்று அறிக்கை ஒன்றின் வழி பிரசரானா குறிப்பிட்டது.

“இக்குழு பரிந்துரை செய்யும் சீரமைப்பு பணிகளை பிரசரானா உடனடியாக மேற்கொள்ளும்”.

“இச்சம்பவம் குறித்து பிரசாரானா மிகவும் வருந்துகிறது. மறைந்த ஆடவரின் குடும்பத்தாருக்குத் தேவையான உதவிகளை வழங்கும்” என்று அவ்வறிக்கை மேலும் விவரித்தது.

 

Exit mobile version