Site icon அநேகன்

ஆயர் கூனிங் சட்டமன்ற தொகுதி காலியானது :பேரா சட்டமன்ற சபாநாயகர் தேர்தல் ஆணையத்திடம் அறிவிப்பு

ஈப்போ,பிப். 28-

ஆயர் கூனிங் சட்டமன்ற தொகுதி காலியானது குறித்த நோட்டீசை பேரா சட்டமன்ற சபாநாயகர் ஜாஹிர் அப்துல் காலிட் தேர்தல் ஆணையத்திடம் (எஸ்பிஆர்) இன்று வழங்கினார்.

இந்த நோட்டீசை பேரா எஸ்பிஆர் இயக்குநர் முகமது நஸ்ரி இஸ்மாயிலிடம் இங்குள்ள பேராக் டாருள் ரிட்சுவான் கட்டிடத்தில் காலை மணி 10.15க்கு வழங்கினார்.

இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இஸ்ஷாம் ஷாருடின் இம்மாதம் 22ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து இத்தொகுதி காலியானது.

“எண் 48 ஆயர் கூனிங் சட்டமன்ற தொகுதி எதிர்பாராத வகையில் காலியானது குறித்து பேராக் சட்டமன்ற தலைவர் அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது” என்று செய்தியாளர்களிடம் ஜாஹிர் தெரிவித்தார்.

 

 

Exit mobile version