புத்ராஜெயா, மார்ச் 1-தங்களின் தொழிலாளர்களைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள அனுமதி வழங்கும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் (பெரெஸ்மா) தலைவர் டத்தோ ஜவஹர் அலி கேட்டுக் கொண்டார்.
தங்கள் உணவகங்களில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்னைக்குத் தீர்வு காண தாயகம் திரும்பியிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் தற்போதைய தொழிலாளர்களைத் தொடர்ந்து இங்கு பணியாற்ற அனுமதிக்க அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
“எங்களின் சிரமத்தைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் “என்று பிரதமரால் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்ட சிங்கா மடானி பெர்சாமா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் விவரித்தார்.
இந்நிகழ்ச்சியை மலேசிய தேசிய அகாடமி, பிரதமர் துறை, கெபிமா, பிரெஸ்மா, பெர்கேசோ ஆகியவை கூட்டாக இணைந்து ஏற்பாடு செய்தன.
இத்திட்டம் மடானி அரசாங்க திட்டங்களுக்கான விழிப்புணர்வு மையங்களாக இந்திய முஸ்லிம் உணவகங்கள் திகழ வகை செய்கிறது .
இந்நிகழ்ச்சியில் பிரெஸ்மா தலைவர் டத்தோ ஜவஹர் அலி, துணைத் தலைவர் டத்தோ மோசின், கெபிமா ஆலோசகர் முகமது காதிர் அலி உள்பட பல பிரமுகர்கள் பங்கேற்றனர்.

