ஷா ஆலம், மார்ச் 3-உயர் கல்வி பயிலும் பி40 இந்திய மாணவர்களின் கல்வி செலவீனத்திற்கு உதவும் வகையில் சிலாங்கூர் மாநில அரசாங்கம் நிதியுதவி திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
அவ்வகையில் இவ்வாண்டுக்கான உயர்கல்வி உதவி நிதிக்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம் என்று மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான இம்மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு தெரிவித்தார்.
இந்த உதவி நிதிக்கு மாணவர்கள் இன்று தொடங்கி மார்ச் 14 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று அறிக்கை ஒன்றின் வழி அவர் குறிப்பிட்டார்.
பாரங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த பின்னர் மார்ச் 14 ஆம் தேதி பிற்பகல் 12.30 மணிக்குள் தனது அலுவலகத்தில் நேரடியாக ஒப்படைக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
மாணவர்கள் விண்ணப்பம் செய்வதற்கு முன்பு நிபந்தனைகளை கவனமுடன் வாசிக்க வேண்டும்.
முழுமையான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும்.
இறுதி நாளுக்குப் பின்னர் வரும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படமாட்டா.
விண்ணப்பங்களை ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டுவின் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது கீழ்க்காணும் அவரின் மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ அல்லது இணைய அகப்பக்கம் வாயிலாகவோ பதிவிறக்கம் செய்யலாம். excoofficepapparaidu@gmail.com / https://ls.selangor.my/Cefq3l
மேல் விவரங்களுக்கு 03-55447307 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

