Site icon அநேகன்

பெண்களிடையே உடல் ஆரோக்கியம் மீதான விழிப்புணர்வு அவசியம்!  -டாக்டர் எம். சுரேந்திரன்

மார்ச் 8-இந்நாட்டிலுள்ள பெண்கள் மத்தியில் உடல் ஆரோக்கியம் மீதான விழிப்புணர்வு அதிகரிக்கப்பட வேண்டும் என்று பிபிபி சிலாங்கூர் மாநில தலைவர் எம். சுரேந்திரன் கேட்டுக் கொண்டார்.

ஆங்காங்கே நடைபெறும் மருத்துவ முகாம்களில் பெண்கள் கலந்து கொள்வது தங்கள் உடல் ஆரோக்கியத்தை இவர்கள் பரிசோதனை செய்து கொள்ள உதவும் என்றார்.

இன்று கொண்டாடப்படும் உலக மகளிர் தினத்தையொட்டி பிபிபி சிலாங்கூர் மகளிர் பிரிவினர் ஏற்பாடு செய்த சுகாதார பரிசோதனை முகாமில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பிபிபி உலு லங்காட் மற்றும் பாங்கி தொகுதி மகளிர் பிரிவினரின் இணை ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ரத்த பரிசோதனை, ரத்த அழுத்தம், உடல் எடை போன்ற சோதனைகள் நடத்தப்பட்டன.

பெண்கள் தங்களின் உடல் நலம் மீது அதிக கவனம் செலுத்த கொள்ள வேண்டும். குடும்பத்தை கவனித்துக் கொள்ள அவர்கள் முதலில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இதன் பொருட்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டது மன நிறைவை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காசே இக்லாஸ் சமூக சங்கம் மற்றும் மெடி ராயல் ஆதரவில் சுங்கை சுவா, தாமான் காஜாங் இண்டாவில் உள்ள சிலாங்கூர் பிபிபி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார் 100 பெண்கள் பங்கேற்றதாக சுரேந்திரன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட மருத்துவ ஆலோசனைகள் தங்களின் உடல் நலம் குறித்து பெண்கள் தெரிந்து கொள்வதற்கு உதவியாக இருந்ததாக அவர் மேலும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பிபிபி பாங்கி தொகுதி தலைவரும் தேசிய தகவல் பிரிவு துணைத் தலைவருமான குமார்,தேசிய மகளிர் பிரிவு தலைவி புனிதா முனுசாமி,சிலாங்கூர் மாநில மகளிர் பிரிவு தலைவி மெர்லின் டி குரோஸ் மற்றும் தொகுதி மகளிர் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version