Site icon அநேகன்

உயர் இலக்கை நோக்கிச் செல்லும் பெண்கள் உடல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்!  -பிபிபி மகளிர் தலைவி புனிதா முனுசாமி 

காஜாங். மார்ச் 8-வாழ்க்கையில் பீடு நடை போட விரும்பும் பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிபிபி மகளிர் பிரிவின் தேசிய தலைவி புனிதா முனுசாமி கேட்டுக் கொண்டார்.

“சுவர் இருந்தால்தான் சித்திரை வரைய முடியும். இதன் அடிப்படையில் பெண்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் தாங்கள் நினைத்ததை சாதிக்க முடியும் “என்று உலக மகளிர் தினத்தையொட்டி வழங்கிய வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.

வீடு, அலுவலகம் என தங்களின் அன்றாட பணிகளை சுமூகமுடன் மேற்கொள்வதற்கு பெண்கள் ஆரோக்கியமாக இருப்பது மிக அவசியம் என்றார்.


தற்போதைய பரபரப்பான உலகில் பெண்களிடையே உடல் ஆரோக்கியம் மீதான விழிப்புணர்வு மேலோங்கியிருக்க வேண்டும் என்பதை புனிதா சுட்டிக் காட்டினார்.

எங்கும் மகிழ்ச்சியும், புன்னகையும் தங்க வேண்டும் என்றால் பெண்கள் என்றும் நலமுடன் இருக்க வேண்டும் என்றார் அவர்.

இதனிடையே, பெண்கள் அனைவரும் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பிபிபி சிலாங்கூர் மாநில மகளிர் பிரிவு தலைவி மெர்லின் டி குரோஸ் கேட்டுக் கொண்டார்.

“நாம் ஆரோக்கியமாக இருந்தால் தான் மற்றவர்களுக்கும் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய முடியும்” என்றார் அவர்.

பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார் மெர்லின்.

 

 

 

 

 

Exit mobile version