Site icon அநேகன்

சபாவில் வெள்ளம்: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,122 ஆக உயர்வு

கோத்தாகினபாலு, மார்ச் 10-சபாவில் வெள்ளம் காரணமாக தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியிருந்தோரின் எண்ணிக்கை 4,122 ஆக அதிகரித்துள்ளது.

இவர்கள் அனைவரும் 1 357 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த எண்ணிக்கை நேற்று 3,579 பேராக இருந்ததாக சபா மாநில பேரிடர் நிர்வாக செயலகம் அறிவித்தது.

தெனோம் வட்டாரத்தில் 276 குடும்பங்களைச் சேர்ந்த 743 பேர் எட்டு தற்காலிக நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்திருப்பதாக அறிக்கை ஒன்றின் வழி இச்செயலகம் விவரித்தது.

 

 

Exit mobile version