Site icon அநேகன்

துன் சாமிவேலு பிறந்த நாளையொட்டி பி. மலையாண்டிக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ 

சைதாப்பேட்டை, மார்ச் 13-மலேசிய முன்னாள் அமைச்சர் நினைவில் வாழும் துன் ச. சாமிவேலு அவர்களின் பிறந்த நாள் விழா, உலக நேசன் பத்திரிகையின் ஆண்டு மலர் வெளியீட்டு விழா மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா இங்கு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இவ்விழா தமிழ் நாடு, சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கலைக் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் துன் சாமிவேலு அவர்களின் பிறந்தநாளையொட்டி மலேசிய மக்கள் ஓசை நாளிதழின் புகைப்பட கலைஞர் பி. மலையாண்டி ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.

மலேசியாவின் தமிழகத்திற்கான தூதரக அதிகாரி சரவணக்குமார் மலையாண்டிக்கு இவ்விருதை வழங்கி கெளரவித்தார் .

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உலக நேசன் பத்திரிகையாசிரியர் இ. எஸ். மணி ஏற்பாடு செய்தார்.

 

Exit mobile version