Site icon அநேகன்

ஆறு நீதிபதிகளின் சேவை தொடரப்படும்! தெங்கு மைமுனின் நிலை இன்னும் தெரியவில்லை

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 13-இவ்வாண்டு பணி ஓய்வு பெறும் ஆறு கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் இரு நீதிமன்ற நிர்வாகிகளின் பதவி காலம் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

எனினும், நாட்டின் தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட்டின் நிலை இன்னும் தெரியவில்லை. இவருக்கு வரும் ஜூன் 30 ஆம் தேதி 66 வயது நிறைவு பெறுகிறது.

மலாயா தலைமை நீதிபதி ஹஸ்னா ஹாஷிம் வரும் நவம்பர் 14ஆம் தேதி வரை பணியாற்றுவார் என்று நீதித்துறை வட்டாரங்கள் கூறின.

கடந்தாண்டு இப்பதவியை வகிக்கத் தொடங்கிய ஹஸ்னா ஹாஷிமிற்கு வரும் மே மாதம் 13ஆம் தேதி 66 வயது பூர்த்தியாகிறது.

அதே வேளையில், நீதிபதி அப்துல் கரீம் அபுல் ஜாலில் தனது சேவையைத் தொடர மாட்டார் என்று தெரிகிறது.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் 66 வயது வரை பதவி வகிக்க அரசியலமைப்பு சட்டவிதிகள் 125 வகை செய்கின்றன. எனினும், மாமன்னர் அனுமதி அளித்தால் மேலும் ஆறு மாதங்களுக்கு இவர்கள் தங்கள் பதவியில் நீடிக்கலாம்.

-எஃப்எம்டி

 

 

 

Exit mobile version