புத்ராஜெயா, மார்ச் 13-தனது முன்னாள் கணவர் வசம் இருக்கும் பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்தியின் மகளைத் தேடும் முயற்சிகளை போலீசார் தொடர்வதாக உள்துறை துணையமைச்சர் சம்சுல் அனுவார் நசாரா கூறினார்.
இந்திரா காந்தியின் மகளை அவரின் முன்னாள் கணவரான கே. பத்மநாதன் என்று அழைக்கப்படும் முகமது ரிட்சுவான் கடந்த 2009 ஆம் ஆண்டு கடத்திச் சென்றதாகக் கூறப்பட்டது.
இவ் விவகாரம் தொடர்பில் ஈப்போ உயர் நீதிமன்றத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் வழக்கு ஆய்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் இதில் அடங்கும் என்றார்.
“இந்த நடவடிக்கையானது பத்மநாதனையும் பிரசனா டிக்சாவையும் கண்டுபிடிப்பதற்காக மேற்கொள்ளப்படுகிறது” என்றார்.
“இவர்கள் தாய்லாந்தில் இருப்பதாக நம்பப்படுவதைத் தொடர்ந்து இவ்விவகாரத்தில் அனைத்துலக போலீசாரின் உதவி நாடப்பட்டுள்ளது. போலீசார் இவ்விவகாரத்தில் அமைதி காக்க மாட்டார்கள். இவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவர்” என்றார் துணையமைச்சர்.
-மலேசியா கினி

