Site icon அநேகன்

பாப்பாராய்டு தலைமையில் சிலாங்கூர் இந்திய வர்த்தகர் உபகரண உதவி திட்ட விளக்கமளிப்பு கூட்டம்! 

ஷா ஆலம், மார்ச் 14-சிலாங்கூர் இந்திய தொழில் முனைவோர் உபகரண உதவி திட்டம் (ஐ-சீட்) மீதான விளக்கமளிப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.

இம்மாநில மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்பு துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு தலைமையில் இங்குள்ள டேவான் ஜூப்ளி மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் இம்மாநிலம் முழுமையும் உள்ள 62 இந்திய சமூக தலைவர்கள் பங்கேற்றனர்.

மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவு (யுபென்), மை செல்,சிலாங்கூர் தொழிலாளர் மேம்பாட்டு பிரிவு (யுபிபிஎஸ்) பேங்க் இஸ்லாம் வங்கி கணக்கு திறப்பு முதலிய விவகாரங்கள் குறித்து இந்நிகழ்ச்சியில் இந்திய சமூகத் தலைவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

ஐ-சீட் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள இந்திய சமூக தலைவர்கள் வாயிலாகவே விண்ணப்பம் செய்ய வேண்டும்.

தங்களுக்குக் கிடைத்த உபகரணங்களை வியாபாரிகள் மற்றவர்களுக்கு விற்பனை செய்யாமல் இருப்பதை இதன் வழி இவர்கள் அணுக்கமாகக் கண்காணிக்கலாம் என்றார் பாப்பாராய்டு.

ஐ-சீட் தொடர்பான மேல் விவரங்களுக்கு இதன் ஒருங்கிணைப்பு பிரிவு தலைவர் மாதவன் முனியாண்டியுடன் 010-2593040 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

 

 

Exit mobile version