மாசாய், மார்ச் 15-மூன்று தரை வீடுகள்சம்பந்தப்பட்ட தீ விபத்தில் 84 வயது முதியவர் கருகி மரணமற்ற வேளையில் மேலும் நால்வர் காப்பாற்றப்பட்டனர்.
இச்சம்பவம் ஜோகூர் பாரு, மாசாயில் நேற்று நள்ளிரவு வேளையில் நிகழ்ந்தது.
இதில் முகமது அரிஸ் சமார் (84)என்பவரே உயிரிழந்தார்.
அதே வேளையில், இவரின் மகளான ஹமிஸா(57) மற்றும் மூன்று பேரப் பிள்ளைகளான எஸாத்தி ஹைடா அஃபெண்டி (21),எஸாத்தி ஹஸ்ரினா (18) மற்றும் எஸாத்தி ஹடிரா (16) ஆகியோர் காப்பாற்றப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பில் நள்ளிரவு 12. 13 க்கு தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக ஜொகூர் ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு துறை நடவடிக்கை பிரிவு தலைவர் ஷைஃபுல் மாப்போப் தெரிவித்தார்.
தகவல் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்துபாசீர் கூடாங் தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவு மற்றும் மவுண்ட் ஆஸ்தின் தொண்டூழிய தீயணைப்பு படையைச் சேர்ந்த 33 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.

