பிகேஆர் சுங்கை பூலோ தொகுதி தலைவராக டத்தோஸ்ரீ ரமணன் போட்டியின்றி தேர்வு!
சுங்கை பூலோ, மார்ச் 18-பிகேஆர் தகவல் பிரிவு துணைத் தலைவரான (1)டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தாம் சுங்கை பூலோ பிகேஆர் தலைவராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இப்பதவிக்கு யாரும் போட்டியிடாததைத் தொடர்ந்து தாம் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாகதொழில் முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணை அமைச்சருமான ரமணன் குறிப்பிட்டார்.
பிகேஆர் சுங்கை பூலோ தொகுதியை வழிநடத்துவதற்கு தம்மீது நம்பிக்கை வைத்திருக்கும் உறுப்பினர்கள் அனைவருக்கும் இவ்வேளையில் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
“இந்த அதிகாரத்தின் வாயிலாக மக்களின் நலனுக்காக நான் மேலும் கடுமையாகப் பாடுபடுவேன். இன வேறுபாடு கருதாது அரசாங்கத்தின் அனுகூலங்கள் இத்தொகுதி மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வேன்”என்று சுங்கை பூலோவில் அம்னோ கிளைத் தலைவர்களிடம் உணவு பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பெர்னாமாவிடம் அவர் பேசினார் .
இந்நிகழ்ச்சியில் சுங்கை பூலோ அம்னோ தொகுதி தலைவர் டத்தோ மெகாட் ஃபிர்டாவுஸ் மெகாட் ஜூனிட்டும் கலந்து கொண்டார்.

