கோலாலம்பூர், மார்ச் 23 –ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் மார்ச் 17 முதல் ஒளிபரப்பு காணும் கவிதா சவிதா எனும் குடும்ப நகைச்சுவைத் தொடரை அனைத்து மலேசியர்களும் கண்டு மகிழலாம்.
உள்ளூர் திரைப்பட இயக்குநர் தீபன் எம். விக்னேஷ் எழுதி இயக்கியுள்ள இந்தத் தொடர், தொழிலதிபர் கந்தாவின் மகன்களான சரவணன் மற்றும் குமரன் ஆகிய ஒரே மாதிரி இல்லாத இரட்டைச் சகோதரர்களை மணந்த பிறகு ஒரே கூரையின் கீழ் வாழ வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும் இரண்டு கல்லூரிப் பகைவர்களைச் சித்தரிக்கிறது.
தங்களுக்குள் உள்ள பகைமைக் குடும்பத்தின் ஒற்றுமையும் அமைதியும் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வந்தவுடன் கவிதாவும் சவிதாவும் ஒருவருக்கொருவர் சார்ந்த விஷயங்களில் குறுக்கிடக் கூடாது என்று ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர்.
இருப்பினும் சூழ்நிலைகள் அவர்களை ஒருவருக்கொருவர் மோத வைக்கின்றன. இதனால், தனி வீட்டிற்குக் குடிப்பெயர இருவரும் தங்கள் கணவர்களைச் சம்மதிக்கச் செய்ய முயற்சிக்கின்றனர்.
அவர்களின் குடும்ப வணிகத்திற்கு ஓர் அச்சுறுத்தல் ஏற்படும்போது விஷயங்கள் தலைகீழாக மாறுகின்றன. கவிதாவும் சவிதாவும் தங்கள் குடும்பத்துடன் இணைந்து அச்சுறுத்தலில் இருந்து வணிகத்தைக் காப்பாற்றுவார்களா அல்லது இன்னும் பகைமையுடன் செயல்படுவார்களா என்பதுதான் கதையின் மையக் கருவாகும்.
அதனை அறிய, ஜெயஸ்ரீ விஜயன், கோமளா நாயுடு, கிளேட்டன் ராஜேந்திரன், புவேந்திரா, திவியா ரதி மற்றும் பலர் நடித்துள்ள 16 அத்தியாய கவிதா சவிதா தொடரைக் காணுங்கள். ஒவ்வொரு திங்கள் முதல் வியாழன் வரை முதல் ஒளிபரப்புக் காணும் கவிதா சவிதா தொடரின் புதிய அத்தியாயங்களை இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் கண்டு மகிழுங்கள்.
ஆஸ்ட்ரோ ஒன் தொகுப்புகள் இப்போது ரிம49.99 கட்டணத்தில் கிடைக்கும். எளிதான ஸ்ட்ரீமிங், முடிவற்றப் பொழுதுபோக்கு. ஆஸ்ட்ரோ பைபரின் 500எம்.பி.பி.எஸ்-ஐ மாதத்திற்கு ரிம139.99 கட்டணத்தில் பொழுதுபோக்குத் தொகுப்புடன் இணைத்து உங்கள் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மேம்படுத்துங்கள். ஆஸ்ட்ரோ ஒன் சந்தாதாரராக அல்லது மேம்படுத்த, www.astro.com.my அணுகவும் அல்லது 03 9543 3838 எண்ணுக்கு புலனம் செய்தி அனுப்பவும்.
மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

