Site icon அநேகன்

பத்ர காளியம்மன் ஆலய விவகாரம்:சுபீட்சமான முறையில் தீர்வு காணப்பட வேண்டும்! -பிரதமர் வலியுறுத்து 

சிப்பாங், மார்ச் 21-தலைநகர், பத்ரகாளியம்மன் ஆலய விவகாரத்திற்கு முதிர்ச்சியான மற்றும் சுபீட்சமான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அரசாங்கத்தால் கோவில் உடைக்கப்படும் விவகாரம் எழுவதற்கு வாய்ப்பில்லை. பிரதமர் என்ற முறையில் எந்தவொரு கோயிலையும் உடைப்பதற்கோ அல்லது மற்றவர்களின் சமய நடவடிக்கைகளுக்குத் தடை விதிப்பதற்கோ நான் அனுமதிக்க மாட்டேன்” என்றார் அன்வார்.

“இவ்விவகாரத்தில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் அமைதி காப்பதோடு தேவையற்ற கருத்துகளை வெளியிடக் கூடாது”.

இங்குள்ள அனைத்துலக விமான நிலைய பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்ட பின்னர் பிரதமர் செய்தியாளர்களிடம் பேசினார்.

பரபரப்புமிக்க ஜாலான் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய இடமாற்றம் மற்றும் பள்ளிவாசல் அமைக்கப்படுவது தொடர்பாக செய்தியாளர்கள் வினவியபோது அன்வார் இவ்வாறு தெரிவித்தார்.

”நில உரிமையாளர் எனும் முறையில் தனியார் நிறுவனத்திற்கும் கோவில் தரப்பினருக்குமிடையே அமைதியான முறையில் பேச்சு நடைபெறுவதற்கு அனுமதிக்க வேண்டும் ” என்றார் பிரதமர்.

 

 

Exit mobile version