Site icon அநேகன்

தமிழ் மலர் ஆசிரியர் கு.தேவேந்திரன் “மணி மைந்தன்” விருது வழங்கி கௌரவிப்பு! 

கோலாலம்பூர், மார்ச் 23-மலேசிய தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் மணிமன்ற நாளையொட்டி தமிழ் மலர் ஆசிரியர் கு.தேவேந்திரன் “மணி மைந்தன் “விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.

தலைநகர், ஜாலான் ஈப்போ, விஸ்மா கேகேபி மண்டபத்தில் இன்று நடைபெற்ற மலேசிய தமிழ் இளைஞர் மணிமன்ற விழாவில் இவர் இவ்விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

மலேசிய தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் தலைவர் முருகன் மணியம், மாநில மற்றும் உச்சமன்ற பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் என திரளானோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் மஇகா முன்னாள் தேசிய உதவி தலைவர் டி. மோகன் கு.தேவேந்திரனுக்கு “மணி மைந்தன் “விருது வழங்கி கெளரவித்தார்.

30 ஆண்டுகள் மணிமன்றத்தில் கு. தேவேந்திரன் ஆற்றிய நற்சேவையைப் பாராட்டும் விதமாக அவருக்கு மணி மைந்தன்” விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Exit mobile version