Site icon அநேகன்

மஇகா கிளைகள் கட்சியின் ஆணிவேர்!  -டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வலியுறுத்து 

கிள்ளான், மார்ச் 23-மஇகா கிளைகள் கட்சியின் ஆணிவேராகத் திகழ்கின்றன என்று இக்கட்சியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

குறிப்பாக, அடிமட்ட நிலையில் உள்ளவர்களுக்கு கட்சியின் சேவை சென்று சேர்வதையும் அவர்களின் நலன்கள் பேணப்படுவதை உறுதி செய்வதிலும் முக்கிய கேந்திரமாக இவை விளங்குகின்றன என்றார்.

மஇகா கிள்ளான் சாமி சாலை கிளையின் 58 ஆவது ஆண்டுக் கூட்டத்திற்குத் தலைமையேற்று உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன் பொருட்டு நமது கிளைகள் என்றும் வலுவோடு இருப்பதோடு எதிர்கால சவால்களை எதிர் நோக்குவதற்குத் தயாராக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று விக்னேஸ்வரன் நினைவுறுத்தினார்.

 

 

Exit mobile version