கோலாலம்பூர், மார்ச் 23-மலேசியத் தமிழ் இளைஞர் மணி மன்ற விழாவையொட்டி 15 பேர் மணிப்பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மலேசியத் தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் தேசியத் தலைவர் முருகன் மணியம் தலைமையில் இன்று கோலாலம்பூர், ஜாலான் ஈப்போ, விஸ்மா கேகேபி மண்டபத்தில் மிகச் சிறப்பாக மணிமன்ற நாள் கொண்டாடப்பட்டது.
மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியத் தலைவர் டத்தோ டி. மோகன் இந்த விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
இவ்விழாவில் மலேசியத் தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் வளர்ச்சிக்குத் துணை புரிந்த 15 பேர் மணிப்பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.
மலேசியத் தமிழ் இளைஞர் மணி மன்றப் பேரவையின் முன்னாள் உதவித் தலைவர்களான ரவீந்திரன் பெருமாள்(மணிச் சக்கரவர்த்தி), தொப்ளா கோவிந்தசாமி(மணிச் சக்கரவர்த்தி), மலேசியத் தமிழ் இளைஞர் மணி மன்றப் பேரவை நிர்வாக மன்ற முன்னாள் உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ராமசாமி (மணி மைந்தன்), பேரவையின் நிர்வாகமன்ற முன்னாள் உறுப்பினர் தேவேந்திரன் குஞ்சு குட்டன் (மணி மைந்தன்), கெடா மாநில செயலவை முன்னாள் உறுப்பினர் மணியம் நாகலிங்கம் (மணி மைந்தன்), தேசிய உதவி தலைவர் ஜோன் கென்னடி சவேரியார் (மணி வேந்தன்)ஆகியோர் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களையடுத்து மணி மன்ற சிலாங்கூர் மாநிலத் தலைவர் பாலா சந்திரபிரகாசம் (மணித் தளபதி), மணிமன்ற பேராக் மாநிலத் தலைவர் தேவேந்திரன் கலைச்செல்வம் (மணிச்செம்மல்), மணிமன்ற நிர்வாகக் குழு உறுப்பினர் நாராயணன் சண்முகவேல் (மணிச்செம்மல்) மற்றும் மணிமன்றப் பேரவையின் நிர்வாகக் குழு உறுப்பினர் திருமதி ரேணுகா தேவி ராமசாமியும் (மணிச்செல்வி)அடங்குவர்.
மலாக்கா மாநில செயலவை உறுப்பினர்களான இரவிக்குமார் நடேசன் (மணித் தளபதி), மற்றும் குமார் ஆறுமுகம் (மணிச்செம்மல்), ஜோகூர் மாநில முன்னாள் செயலாளர் இரத்தினகுமார் சுப்பிரமணியம் (மணி திலகம்), சிலாங்கூர் மாநில முன்னாள் பொருளாளர் ராமசாமி நடேசன்(மணிச்சம்மல்), ‘நினைவில் வாழும்’ மணிபிரதாபன் செல்லமுத்து (மணிரத்னா)ஆகியோரும் மணிப்பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.
அமரர் மணிபிரதாபன் செல்லமுத்துவின் சார்பில் அவரின் துணைவியார் விருதைப் பெற்றுக் கொண்டார்.

