Site icon அநேகன்

பிகேஆர் உதவி தலைவர் பதவி: டத்தோஸ்ரீ ரமணன் போட்டி! 

கோலாலம்பூர் மார்ச் 24-வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் பிகே ஆர் உதவி தலைவர் பதவிக்கான தேர்தலில் தாம் போட்டியிடவிருப்பதாக இக்கட்சியின் தகவல் பிரிவு துணைத் தலைவர் (1) டத்தோஸ்ரீ ஆர். ரமணன் அறிவித்துள்ளார்.

பிகேஆர் கட்சியை அடிமட்ட நிலையில் இருந்து மத்திய தலைமைத்துவம் வரை வலுப்படுத்தும் நோக்கத்திற்காகத் தாம் இப்பதவிற்குப் போட்டியிட விருப்பதாக தொழில் முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணைய மைச்சருமான ரமணன் குறிப்பிட்டார்.

“இந்த மிகப்பெரிய பொறுப்பை ஏற்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன்பு நாடு முழுமையும் உள்ள கட்சித் தலைவர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் நான் கலந்துரையாடினேன்” என்றார் அவர்.

“எனது இந்த முடிவு குறித்து பிரதமரும் பிகேஆர் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிடமும் நான் தெரிவித்துவிட்டேன்” என்றார் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன்.

சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ  அமிருடின் ஷாரி, நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ  அமினுடின் ஹருண், இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது,அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் சாங் லீ காங் மற்றும் நூருல் இசா அன்வார் ஆகியோர் நடப்பு பிகேஆர் உதவி தலைவர்கள் ஆவர்.

இந்த ஐவரும் தங்களின் பதவியைத் தற்காத்துக் கொள்ளப் போவதாகக் கூறப்படுகிறது.

 

Exit mobile version