Site icon அநேகன்

போலிஸ் & தீயணைப்பு அதிகாரிகளுக்கு நோன்பு கஞ்சி! மஇகா இளைஞர் பிரிவு வழங்கியது

கோலாலம்பூர், மார்ச் 26-நோன்பு மாதத்தில் தலைநகரில் கடமையில் ஈடுபட்டுள்ள போலிஸ் மற்றும் தீயணைப்புப்படை அதிகாரிகளுக்கு மஇகா இளைஞர் பிரிவு நோன்பு கஞ்சியை வழங்கியது.

அப்பிரிவின் தலைவர் அர்விந்த் கிருஷ்ணன் தலைமையில் இந்த நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது.

போலிஸ் மற்றும் தீயணைப்புப்படை அதிகாரிகள் நோன்பு துறப்பதற்கு ஏதுவாக இந்த கஞ்சியைத் தாங்கள் வழங்கியதாக அரவிந்த் சொன்னார்.

நேற்று கொண்டாடப்பட்ட 218ஆவது போலிஸ் தினத்தை முன்னிட்டு டாங் வாங்கி போலிஸ் அதிகாரிகளுக்கும் தீயணைப்புப் படையினருக்கும் நோன்பு கஞ்சி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அதே வேளையில், ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் பொதுமக்களுக்கும் நோன்பு கஞ்சியைத் தாங்கள் விநியோகம் செய்ததாக அவர் மேலும் கூறினார்.

350க்கும் மேற்பட்ட நோன்பு கஞ்சி பொட்டலங்கள்    வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது .

பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் ஒற்றுமை தொடர்ந்து கட்டிக் காக்கப்படுவதற்கு இந்நடவடிக்கை துணை புரியும் என்றார் அரவிந்த்.

 

 

Exit mobile version