Site icon அநேகன்

நோன்பு பெருநாளையொட்டி 50% டோல் கட்டண சலுகை! – அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி

பெட்டாலிங்  ஜெயா, மார்ச் 26- நோன்பு பெருநாளை முன்னிட்டு இரண்டு தினங்களுக்கு 50 விழுக்காடு டோல் கட்டண சலுகை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சலுகையானது வெள்ளிக்கிழமை பின்னிரவு 12.01தொடங்கி மறுநாள் சனிக்கிழமை இரவு 11.59 வரை நீடிக்கும் என்று பொதுப்பணி அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார் .

அதே வேளையில், இந்தச் சலுகை முதல் வகுப்பு வாகனங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பதை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

நாட்டின் எல்லையான பங்குனான் சுல்தான் இஸ்கந்தர்(பிஎஸ்ஐ), வடக்கு தெற்கு நெடுஞ்சாலை(பிளஸ்) மற்றும் மலேசிய – சிங்கப்பூர் இரண்டாவது தஞ்சோங் குப்பாங் நெடுஞ்சாலை (லிங்க் கெடுவா) ஆகிய நெடுஞ்சாலைகளைத் தவிர்த்து மற்ற நெடுஞ்சாலைகளுக்கு இச்சலுகை பொருந்தும் என்று அறிக்கை ஒன்றின் வழி அவர் விவரித்தார்.

 

 

Exit mobile version