Site icon அநேகன்

நோன்பு பெருநாள் விடுமுறை:  2.77 லட்சம் வாகனங்கள் முக்கிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும்! 

கோலாலம்பூர், மார்ச் 27-நோன்பு பெருநாள் விடுமுறையை முன்னிட்டு நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 2.77 லட்சமாக அதிகரிக்கக்கூடும் என்று மலேசிய நெடுஞ்சாலை வாரியம் (எல்எல்எம்) கூறியது.

இந்த எண்ணிக்கையில் 2.1லட்சம் வாகனங்கள் பிளஸ் நெடுஞ்சாலையையும், 216,000 வாகனங்கள் கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையையும், 176,000 வாகனங்கள் மேற்கு கரை நெடுஞ்சாலையையும், 156,000 வாகனங்கள் கிழக்கு கரை நெடுஞ்சாலையையும் (எல்பிடி 1) 70,000 வாகனங்கள் எல்பிடி2 நெடுஞ்சாலையையும் பயன்படுத்தும் என்று அறிக்கை ஒன்றின் வழி எல்எல்எம் குறிப்பிட்டது.

அதே வேளையில், ஏப்ரல் 5&6ஆம் தேதிகளில்  தலைநகர் திரும்பும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று அவ்வறிக்கை சுட்டிக் காட்டியது.

 

 

Exit mobile version