Site icon அநேகன்

பேராக் மாநில ரீதியிலான நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு! 

ஈப்போ, மார்ச் 31-  பேராக் மாநில 2025ஆம் ஆண்டு நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு இங்குள்ள பேராக் இந்திரா மூலியா அரங்கத்தில் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பல்லின மக்களின் வருகையால் இன்றைய நிகழ்வு மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

தேசிய மஇகா உதவித் தலைவரும் பேராக் மாநில மஇகா தொடர்பு குழுத் தலைவருமான டான் ஸ்ரீ எம் இராமசாமி தம் துணைவியார் புவான் ஸ்ரீ இந்திரா காந்தியுடன் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வை பேராக் மாநில மாட்சிமை தங்கிய சுல்தானும் அவர்தம் துணைவியாரும் அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்து நிகழ்வுக்கு மேலும் மெருகூட்டினர்.

இவர்களுடன் மாட்சிமை தங்கிய ராஜா டி ஹிலிர் பேராக் மற்றும் மாட்சிமை தங்கி ராஜா முடா பேராக்கும் இந்நிகழ்வில் கலந்துகொண்டது இந்நிகழ்வுக்கு மேலும் சிறப்பு சேர்த்தது.

இந்நிகழ்வில் பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சராணி முகமட் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இதுபோன்ற திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வுகள் வாயிலாக பேராக் மாநில மக்களிடையே ஒற்றுமையும் நல்லிணக்கத்தையும் வலுப்படுத்த முடியும் என குறிப்பிட்டார்.

 

 

 

Exit mobile version