Site icon அநேகன்

எரிவாயு குழாய் வெடிப்புச் சம்பவம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா வெ. 5,000 அவசர உதவி நிதி! பிரதமர் தகவல்

சுபாங் ஜெயா ஏப். 1-இங்குள்ள புத்ரா ஹைட்ஸ், ஜாலான் புத்ரா ஹார்மோனியில் ஏற்பட்ட எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வீட்டுஉரிமையாளர்களுக்கு அவசர உதவி நிதியாக தலா 5,000 வெள்ளி வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் சிறிய அளவில் பாதிப்பை எதிர்நோக்கிய வீட்டு உரிமையாளர்களுக்குத் தலா 2, 500 வெள்ளி வழங்கப்படும் என்று சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் வருகை புரிந்த போது பிரதமர் அறிவித்தார்.

பாதிக்கப்பட்ட வீடுகளைப் புதுப்பிக்கும் பொறுப்பு அனைத்தையும் அரசாங்கம், பெட்ரோனாஸ் மற்றும் மாநில அரசாங்கம் சேர்ந்து ஏற்றுக் கொள்ளும் என்றார் .

இவர்கள் அனைவரும் தத்தம் வீட்டிற்குத் திரும்புவதற்கு முன்பு இவர்களைக் குடி அமர்த்துவதற்குப் பொருத்தமான நடவடிக்கை குறித்து தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் சொன்னார்.

 

Exit mobile version