சுபாங் ஜெயா, ஏப். 1-புத்ரா ஹைட்ஸ், ஜாலான் புத்ரா ஹார்மோனியில் ஏற்பட்ட எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் கண் கோளாறு பிரச்சினையை எதிர்நோக்குபவர்களுக்கு துன் உசேன் ஒன் தேசிய கண் மருத்துவமனை இலவச சிகிச்சையை அளிக்க முன்வந்துள்ளது.
சிவந்த கண், கண் எரிச்சல், வலி, தெளிவற்ற பார்வை, கண்ணில் இருந்து அளவுக்கதிகமான நீர் வடிதல், புகை அல்லது தீ ஜூவாலைகளால் கண்களில் ஏற்பட்டுள்ள அசௌகரியமான சூழலை எதிர்நோக்கியிருப்பவர்கள் இந்த மருத்துவமனையை நாடலாம் என்று சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மிஷால் எங் மெய் ஜீ தெரிவித்தார்.
எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சையை வழங்க முன் வந்திருக்கும் இந்த மருத்துவமனைக்கு மிஷால் எங் நன்றி தெரிவித்தார்.
24 மணி நேரம் செயல்படும் துன் உசேன் ஒன் தேசிய கண் மருத்துவமனையை 03-77181488 மற்றும் அவசர தேவைக்கு அவசர நடவடிக்கை மையத்துடன் 03-80247700 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

