Site icon அநேகன்

ஜோதிட பயணமும் ஆன்மீக அனுபவமும்

கோலாலம்பூர், ஏப்.5-    ஜோதிட பயணமும் அதனால் ஏற்பட்ட ஆன்மீக அனுபவங்கள் குறித்து சிலாங்கூர் மாநில வானியல் ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த கௌரவ ஆலோசகர் ஜோதிடர் ஸ்ரீ சுப்ரமணியம் கந்தையா அவர்கள் நம்முடன் பகிர்ந்துக் கொள்ள இருக்கிறார்.   

இந்த சந்திப்புக் கூட்டம். ஒவ்வொரு திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்படும் ஒரு வாராந்திர நிகழ்ச்சியாகும்.

இதில்* விசுவாசுவ புத்தாண்டில் 12 ராசிகளுக்குமான பலன்கள்

* இலாப மற்றும் நட்ட கணிப்பு (தொழில், நிதி, உடல் சுகாதாரம்)

* ஜோதிடர் ஆகலாம் அறிமுக வகுப்பு. முந்தைய காலத்தின் அறிவியல் ஜோதிடம் பற்றிய விளக்கமளிப்பு, ஜோதிடப் பயணமும் அதனால் ஏற்பட்ட ஆன்மீக அனுபவங்கள் குறித்த அனைத்துக் கேள்விகளுக்குத் தகுந்த விளக்கமளிப்பை ஜோதிடர் சுப்ரமணியம் கந்தையா வழங்குவார்.   

ஆகையால் இந்த வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்திக் கொண்டு ஏப்ரல் 7ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 7.45 மணி தொடங்கி 9.00 மணி வரை நடைபெறும் இலவச சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு 2025ஆம் ஆண்டு பஞ்சாங்க நாள்காட்டியைப் பயன்படுத்தும் முறை குறித்து நன்கு தெரிந்து கொள்ளும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்த மெய்நிகர் நிகழ்வில் கலந்து கொள்ள  விரும்புவோர் பின்வரும் இணைப்பைச் சொடுக்கவும். ZOOMID: 878 2811 0295 PASSCODE:12345

  இந்நிகழ்ச்சி குறித்த மேல் விவரங்களுக்கு 0123025643 (அரவிந்த்), 0163679638 (கணேஷ் குமார்) ஆகியோரை அழைக்கலாம்.

Exit mobile version