Site icon அநேகன்

கெஅடிலான் தேர்தல்:உலு லங்காட் தொகுதி தலைவர் பதவியை தற்காத்துக் கொள்கிறார் ராஜன் முனுசாமி! 

காஜாங், ஏப். 7-இவ்வார இறுதியில் நடைபெறவிருக்கும் கெஅடிலான் கட்சித் தேர்தலில் உலு லங்காட் தொகுதி தலைவர் பதவியை தற்காத்துக் கொள்ளத் தாம் போட்டியிடவிருப்பதாக ராஜன் முனுசாமி குறிப்பிட்டார் .

இதுகாறும் இத்தொகுதி மக்களுக்கு தாம் ஆற்றிய சேவை இத்தேர்தலில் மகத்தான ஆதரவைத் தமக்குப் பெற்றுத் தரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே, 2025 – 2028 தவணைக்கான கெஅடிலான் கட்சியின் தொகுதி தலைவர்களுக்கான தேர்தல் 2025 ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கிறது.

அதே வேளையில், சிலாங்கூர் மாநில தொகுதி தலைவர்களுக்கான தேர்தல் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறுகிறது.

அவ்வகையில் கெஅடிலான் தொகுதி தலைவர்களுக்கான தேர்தலில் ராஜன் முனுசாமி தனது உலு லங்காட் தொகுதி தலைவர் பதவியை தற்காத்துக் கொள்ளப் போட்டியிடுகிறார்.

கடந்த 2007ஆம் ஆண்டு அரசியலில் காலடி வைத்த ராஜன் முனுசாமி இத்தொகுதி மக்களுக்காக பல்வேறு அளப்பரிய சேவைகளை ஆற்றி வருகிறார் .

தனது அரசியல் பயணத்தில் தலைவர்களோடு இணைந்து மத்திய மற்றும் மாநில அரசாங்கத்தின் உதவிகள் மக்களுக்கு எளிதாகக் கிடைப்பதற்கு உதவியுள்ளார்.

மக்களின் பல்வேறு பிரச்சினைகளையும் இவர் வெற்றிகரமாகத் தீர்த்து வைத்துள்ளார்.

அவற்றுள் பின் வருமாறு :

*இளைஞர் மேம்பாட்டு திட்டங்களை அமல்படுத்தியது*

*மகளிர் மேம்பாட்டு திட்டங்களை அமல்படுத்தியது*

*சுகாதாரம், சமூக நலன் மற்றும் மருத்துவ திட்டங்களை அமல்படுத்தியது

*ஆலய நிலத்தை அரசு பதிவேட்டில் இடம் பெறச் செய்யும் விவகாரத்திற்குத் தீர்வு கண்டது*

*தோட்டப் பாட்டாளிகளின் வீட்டுப் பிரச்னைக்குத் தீர்வு கண்டது*

*வெள்ளம், அடிப்படை வசதி, வீடுகளில் தீ விபத்து உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு வெற்றி கரமாகத் தீர்வு கண்டது*

*மித்ரா சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை அமல்படுத்தியது*

*காஜாங் நகராண்மைக் கழக ரீதியில் இஸ்லாமியர் அல்லாத வழிபாட்டு தலங்களுக்கான செயற்குழுவை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது*

*புரோகாவில் மின் சுடலை அமைப்பதற்கு அரசு அனுமதி பெற முயற்சி மேற்கொண்டது*

உலு லங்காட் தொகுதி  (செமினி & டுசுன் துவா) மக்களுக்குத் தான் தொடர்ந்து சேவையாற்றுவதற்கு ஏதுவாக இம்முறை தனக்கு உறுப்பினர்கள் பேராதரவு வழங்கி தன்னை வெற்றி பெறச் செய்வர் என ராஜன் முனுசாமி பெரிதும் எதிர்பார்க்கிறார்.

 

Exit mobile version