Site icon அநேகன்

டிரம்ப்பின்  வரி ஒத்திவைப்பு  ஆறுதல் அளிக்கிறது!  பிரதமர் தகவல்

புத்ரா ஜெயா, ஏப். 10-மலேசியா உட்பட அமெரிக்காவுடன் வர்த்தகத்தில்  ஈடுபட்டுள்ள பல நாடுகளுக்கான கூடுதல் வரி அமலாக்கத்தை அமெரிக்கா ஒத்தி வைத்திருப்பது சற்று ஆறுதல் அளிப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

எரிசக்தி மற்றும் குடிநீர் உருமாற்ற அமைச்சின் (பெட்ரா) ஏற்பாட்டிலான நோன்பு பெருநாள் பொது உபசரிப்புநிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது பிரதமர் செய்தியாளர்களிடம்  இத்தகவலை வெளியிட்டார்.

75 நாடுகளுக்கான கூடுதல் வரி விதிப்பை அமெரிக்கா 90 நாட்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.

இந்தக் கூடுதல் வரி தொடர்பில் பேச்சு நடத்த மலேசிய பேராளர்கள் குழுவை அமெரிக்காவிற்கு அனுப்ப அரசாங்கம் திட்டமிட்டிருந்ததாக அன்வார் முன்னதாகக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Exit mobile version