கோலாலம்பூர், ஏப். 11-பிபிபி தேசிய முன்னணியுடன் இணைந்து பணியாற்றி வருகிறது என்றும் இக்கூட்டணியின் கொள்கைக்கு ஏற்ப தனது நடவடிக்கைகளை இக்கட்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
“நாங்கள் இப்பொழுது தேசிய முன்னணியுடன்தான் இருக்கிறோம். இக்கூட்டணியுடன் இணைந்து வேலை செய்து வருகிறோம். எங்களிடையே பரஸ்பர நட்பு உள்ளது”என்று இங்குள்ள பிபிபி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற இக்கட்சியின் 72ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.
எனினும், நிலைமை மாறுமேயானால் தனி கட்சியாகச் செயல்படவும் தயார். காரணம் எங்களுக்குப் பின்னணியில் உறுப்பினர்கள் பலமாக உள்ளனர் . கட்சியின் அனைத்து வித போராட்டங்களுக்கும் கைகொடுக்க்கூடியவர்கள் இவர்கள் என்றார்.

