Site icon அநேகன்

ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் மும்முனை போட்டி! 

தாப்பா, ஏப். 12-வரும் 26ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்த இடைத் தேர்தலையொட்டி இன்று காலையில் இங்குள்ள டேவான் மெர்டேக்காவில் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.

இத்தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் முகமட் யுஸ்ரி பக்ரியும் , பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் அப்துல் முஹைமின் மாலிக்கும் பிஎஸ்எம் சார்பில் பவானி கன்னியப்பனும் போட்டியிடுகின்றனர்.

ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷாருடின் அண்மையில் காலமானதைத் தொடர்ந்து இத்தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்களின் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக தத்தம் கட்சி ஆதரவாளர்கள் மண்டபத்தில் ஒன்று திரண்டனர்.

 

Exit mobile version