தாப்பா , ஏப். 12-தாப்பா நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.
இத்தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் டாக்டர் யுஸ்ரி போட்டியிடுகிறார்.
இந்த இடைத்தேர்தலில் தேசிய முன்னணி மகத்தான வெற்றி பெற பிபிபி கட்சி தீவிர பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
இன்று நடைபெற்ற வேப்புமனு தாக்கலின் போது தேசிய முன்னணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தலைமையிலான அணியினர் ஒன்று திரண்டனர்.
பேராக் மாநில பிபிபி தலைவர் டத்தோ லீ ஹெங், பிபிபி கட்சியின் செயலாளர் டத்தோ இண்டர்ஜிட் சிங், இளைஞர் பிரிவு தலைவர் சத்யா சுதாகரன், மகளிர் பிரிவு தலைவி புனிதா, தகவல் தொடர்பு துறை துணைத் தலைவர் குமார், சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன், பிபிபி கட்சியின் உச்சமன்ற உறுப்பினர்களான நந்தா, கதிர், கெடா மாநில தலைவர் மாணிக்கவாசகம் ஆகியோரும் இவர்களில் அடங்குவர்.
இத்தேர்தலையொட்டி ஜாலான் பெசார் ஆயர் கூனிங்கில் பிபிபி தனது தேர்தல் நடவடிக்கை அறையைத் திறந்துள்ளது.
இந்த நடவடிக்கை அறையை டாக்டர் லோகபாலா இன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

