Site icon அநேகன்

கெஅடிலான் உலு சிலாங்கூர் தொகுதி  தேர்தல்:டாக்டர் சத்ய பிரகாஷ் அமோக வெற்றி! 

கோல குபுபாரு, ஏப். 14- கெஅடிலான் உலு சிலாங்கூர் தொகுதி தலைவராக அக்கட்சியின் உலு சிலாங்கூர் தொகுதி ஒருங்கிணைப்பாளர்  டாக்டர் சத்ய பிரகாஷ் அமோக வெற்றி பெற்றார்.

இதில் மருத்துவருமான டாக்டர் சத்யபிரகாஷ் 3,016 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கலைச்செல்வன் ஜெகநாதன் 609 வாக்குகளையும் ஜூன் லியோவ் சியாட் ஹூய் 993 வாக்குகளையும் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

இத்தொகுதியில் 5,538 பேர் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர். இவர்களில் 4,618 பேர் இத்தேர்தலில் வாக்களித்ததாக அறியப்படுகிறது.

 

 

Exit mobile version