காஜாங், ஏப்.13-கெஅடிலான் உலு லங்காட் தொகுதி தலைவருக்கான தேர்தலில் ராஜன் முனுசாமி 1845 வாக்குகளுடன் மகத்தான வெற்றி பெற்றார்.
இதன் வாயிலாக இத்தொகுதியின் தலைவர் பதவியை இவர் தக்க வைத்துக் கொண்டார். இத்தேர்தலில் ராஜனை எதிர்த்துப் போட்டியிட்ட முகமது ஹானாபி ஜாலாலுடின் 1072 வாக்குகள் பெற்றார்.
கெஅடிலான் தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் நேர்மையான மற்றும் நம்பிக்கையான தலைமைத்துவத்தின் கீழ் இக்கட்சி மக்கள் குரலாக ஒலிக்கிறது.
நேற்று சிலாங்கூர் உட்பட சில தொகுதிகளில் தேர்தல்கள் நடத்தப்பட்டு இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
“இந்த வெற்றியை அடைவதற்கு எங்களுக்குப் பக்க பலமாக இருந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமுவந்த நன்றி”என்றார் ராஜன்.
போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவருக்கும் இவர் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.
கட்சித் தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க வரும் பொதுத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் கட்சியை ஒன்றிணைந்து வலுப்படுத்துவோம் என்றார் ராஜன்.
அதே வேளையில், நாட்டின் பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

