சுங்கை, ஏப். 16-பி.கே.ஆர்.சுங்கை சிப்புட் தொகுதி தேர்தலில் அதன் நடப்பு தலைவர் கேசவன் சுப்பிரமணியத்தைத் தோற்கடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார் நோவிந்தன்.
அடிமட்ட உறுப்பினர்களின் வலுவான ஆதரவைப் பெற்றிருக்கும் நோவிந்தன் இந்த வெற்றியின் வாயிலாக இத்தொகுதியின் உள் அரசியல் கட்டமைப்பில் உருமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த 15 ஆவது பொதுத் தேர்தலில் மஇகா தேசிய தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரனைத் தோற்கடித்ததன் வாயிலாக மிகப்பெரிய ஜாம்பவானாக வர்ணிக்கப்பட்ட கேசவன் பி. கே. ஆர். கட்சியின் இத் தொகுதி தேர்தலில் தோல்வியுற்றது கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
இவரின் இந்த வெற்றியானது தொகுதி தலைமைத்துவத்தில் அடிமட்ட உறுப்பினர்கள் புது முகத்தையே விரும்புகின்றனர் என்பதைத் தெளிவாகக் காட்டியுள்ளது.
பி.கே.ஆர்.சுங்கை சிப்புட் தொகுதி தலைவராக வெற்றி பெற்றுள்ள நோவிந்தன் இத்தொகுதியை முதிர்ச்சியான அரசியல் கட்டத்திற்கு எப்படி கொண்டு செல்லப் போகிறார் என்பதே தற்போது அனைவரின் கவனமாக உள்ளது.
இதனிடையே, இத்தோல்விக்குப் பின்னர் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் கேசவனின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

